பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம் 2012ன் கீழ் பா.உ சிறீதரனால் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் அறிவகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.கல்வி, முன்பள்ளி, விளையாட்டு, குடிநீர், சனசமூக நிலைய அபிவிருத்தி, நூலகம், மாதர் அபிவிருத்தி, மின்சாரம் என பல்வேறு துறைகளுக்கென குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை வரவு செலவு திட்டத்தின் கீழ் மறைந்த முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கல்வி பணிப்பாளரும் சிறந்த கல்வி நிர்வாகியுமான அமரர் பொன்.சபாபதி, மறைந்த முன்னாள் பா.உறுப்பினரும் மண்ணுக்காக உயிர் தந்தவருமான கௌவர.சிவனேசன் ஆகியோர் நினைவாக அரங்குகள் அமைப்பதற்கு சிறப்பாக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையில், கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை, கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலை, கிளிநொச்சி பன்னங்கண்டி இ.த.க.பாடசாலை என்பவற்றுக்கு நிழற்பட இயந்திரம் இல்லாத குறை தீரும் படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்வி திணைக்கள தளபாட கொள்வனவிற்கு ரூபாய் 1 லட்சமும், கிளிநொச்சி பரந்தன் அ.த.க.பாடசாலைக்கு1 லட்சம் ரூபாயும், கிளிநொச்சி தம்பிராசபுரம் அ.த.க.பாடசாலைக்கு 1 லட்சம் ரூபாய் என இந்த பாடசாலைகளின் மைதான புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி செலியாதீவு அ.த.க.பாடசாலைக்கு 200000 ரூபாய் மற்றும் உதயநகர் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 135000 ரூபாய் என குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி பணிகளுக்கு 200000 ரூபாயும், யாழ். மண்டைதீவு மகா வித்தியாலத்திற்கு மின்பிறப்பாக்கி கொள்வனவிற்கு 100000 ரூபாய் உட்பட ஆறு பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2012 பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனால் 20 விளையாட்டுக்கழகங்களுக்கு யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ரூபாய் 2,80,000 வகுத்து ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முன்பள்ளி நலன் கருதி 7,40,000 ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இம் முறையும் கீழ் வரும் முன்பள்ளிகளின் நலன்கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, ஜெயபரம் வடக்கு, திருச்சிலுவை முன்பள்ளிக்கு உபகரணங்கள் – ரூபாய் 25000 , கிளி. நாகேந்திரா முன்பள்ளிக்கு -ரூபாய் 25000, கிளி. புதுமுறிப்புசேரமான் முன்பள்ளிக்கு-ரூபாய் 20000 , கிளி. விநாயகபுரம் முன்பள்ளிக்கு- ரூபாய் 50000, கிளி. ஜசாந்தபுரம் சாந்தன் முன்பள்ளிக்கு- ரூபாய் 30000, யாழ். தெல்லிப்பளை நுண்மதி முன்பள்ளிக்கு- ரூபாய் 20000, யாழ். குட்டியப்புலம் கலைவாணி முன்பள்ளிக்கு- ரூபாய் 50000, யா. ஆழியவளை கொடுக்குளாய் மகாத்மா முன்பள்ளிக்கு- ரூபாய் 25000, இம்முறை சனசமுக நிலையங்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்பட்டு 18 சனசமுக நிலையங்களுக்கு பல்வேறு திட்டங்களுக்கு 8 இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பின்வருமாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.சுண்ணாகம் கலைவாணி சனசமூக நிலையத்துக்கு ரூபாய் -50000, யாழ். நீர்வேலி வடக்கு சிவசங்கர பண்டிதர் சனசமூக நிலையத்துக்கு 40000 ரூபாய், யாழ். தெல்லிப்பளை கரும்பண்ணை தமிழ் மன்றம் சனசமூக நிலையத்திற்கு – 25000 ரூபாய், யாழ். கட்டுவன் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு- 25000 ரூபாய், யாழ். அல்வாய் கிழக்கு பாரதி சனசமூக நிலையத்துக்கு-50000 ரூபாய், யாழ். கரவெட்டி கிழக்கு வளர்மதி சனசமூக நிலையத்துக்கு-100000 ரூபாய், யாழ்.சுண்ணாகம் அம்பேத்கர் சனசமூக நிலையத்துக்கு 40000 ரூபாய், யாழ். கோண்டாவில் கிழக்கு நாராயண சனசமூகநிலையத்துக்கு 50000ரூபாய், யாழ். உடுவில் உதயசூரியன் சனசமூக நிலையத்துக்கு 75000ரூபாய், யாழ். கைதடி கிழக்கு துர்க்கா சனசமூக நிலையத்துக்கு 50000 ரூபாய், யாழ். பருத்தித்துறை தமிழ் அருவி சனசமூக நிலையத்துக்கு 50000 ரூபாய்.
கிளி. இரத்தினபுரம் அறிவொளி சனசமூகநிலையத்துக்கு 75000 ரூபாய். கிளிபுளியம்பொக்கணை காண்டீபன் சனசமூக நிலையத்துக்கு- 25000 ரூபாய், கிளி. வட்டக்கச்சி சனசமூக நிலையத்துக்கு-25000 ரூபாய், கிளி. உழவர் ஒன்றியம் சனசமூக நிலையத்துக்கு -25000 ரூபாய், கிளி. வன்னேரிக்குளம் உதயதாரகை சனசமூக நிலையத்துக்கு-30000ரூபாய், கிளி. தம்பிராசபுரம் தம்பிராசா சனசமூக நிலையத்துக்கு -25000ரூபாய்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டம் 2012ல் பா.உறுப்பினர் சி.சிறீதரனால் அறநெறி வளர்ச்சி கருதி பின்வரும் ஆலயங்களுக்கு 6 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் வகுத்து ஒதுக்கப்பட்டுள்ளது.
கிளிகொம்படி அம்பாள் கோவிலுக்கு-50000 ரூபாய், கிளி. சிறீ மீனாட்சி அம்பாள் கோவிலுக்கு-75000ரூபாய், கிளி.திருநகர் கிருஸ்ணர் கோவிலுக்கு-50000ரூபாய் கிளி. பூநகரி வாங்கேணி பிள்ளையார் கோவிலுக்கு-75000, கிளி. ஜெயந்திநகர் சென் அன்ரனீஸ் தேவாலயத்துக்கு-75000 ரூபாய், கிளிஸ்கந்தபுரம் முருகன் கோவிலுக்கு- 50000 ரூபாய், யாழ் கில்னர்லேன் வைரவர் கோவிலுக்கு-50000 ரூபாய், யாழ். வரணி குடமியன் பிள்ளையார் கோவிலுக்கு-50000 ரூபாய், யாழ். நெடுந்தீவு நெலுவேனில் பிள்ளையார், கோவிலுக்கு-100000ரூபாய்.
மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் நலன் கருதி 3 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் பின்வரும் மாதர் சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிளி. பரந்தன் காஞ்சிபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 40000 ரூபாயும், கிளி கோணாவில் கிழக்கு மாதர் கிரா அபிவிரத்தி சங்கத்திற்கு 50000 ரூபாயும், மாலை நேர கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு சோலர் மின்விளக்கு தொகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிளி. குமாரசாமிபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு-70000 ரூபாய், கிளி. பளைகச்சார் வெளி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு -25000 ரூபாய் கிளி. பளை வண்ணாங்கேணி வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு- 25000 ரூபாய், கிளி. பளை மாசார் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு- 25000 ரூபாய், கிளி. புலொப்பளை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு- 25000 ரூபாய், கிளி. பளை தர்மக்கேணி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு- 25000 ரூபாய், கிளி. பல்லவராயன்கட்டு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு -75000ரூபா என தையல் இயந்திர கொள்வனவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய ஒதுக்கீட்டு விபரங்கள் கீழ் வருமாறு:
கிளிநொச்சி சிவபாத கலையகம் வித்தியாலயத்துக்கு பாடசாலை அபிவிருத்தி வேலை-75000 ரூபாய், கிளி. கரியாலை நாகபடுவான் இல.01 பாடசாலைக்கு நூலகப்பொருட்கள் வழங்கல்- 50000 ரூபாய், கிளி. கரியாலை நாகபடுவான் இல.02 பாடசாலைக்கு நூலகப்பொருட்கள் வழங்கல்-50000 ரூபாய், கிளி. வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்கு பொன் சபாபதி கலையகம் அமைத்தல்-150000 ரூபாய், யாகந்தரோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு -50000 ரூபாய்.
யாழ். குட்டியப்பலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கட்டிட அமைப்பு.-50000 ரூபாய், யா. அளவெட்டி தெற்கு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலைக்கு கட்டிட அமைப்பு- 50000 ரூபாய், யாழ்.கரவெட்டி கிழக்கு இந்து தமிழ்க் கலவன் பாடசாலைக்கு கட்டிட அமைப்பு- 50000 ரூபாய், கிளி. இயக்கச்சி அதிசயம் விளையாட்டுக் கழகத்துக்கு 75000 ரூபாய், கிளி. பளை அறிவொளி விளையாட்டுக் கழகத்துக்கு- 20000 ரூபாய், கிளி. சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகத்துக்கு-40000 ரூபாய், கிளி. கிருஸ்ணபாரதி விளையாட்டுக் கழகத்துக்கு- 30000 ரூபாய், கிளி. தூய தமிழ் விளையாட்டுக் கழகத்துக்கு-20000 ரூபாய், கிளி. கிருஸ்ணபுரம் விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய், கிளி. புதிய பாரதி விளையாட்டுக் கழகத்துக்கு 40000 ரூபாய்.
கிளி. கல்லாறு கடல்மீன்கள் விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய், கிளி. பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டுக் கழகத்துக்கு 20000ரூபாய், கிளி. விளை பூமி விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய், கிளி. இளந்தளிர்கள் விளையாட்டுக் கழகத்துக்கு-20000 ரூபாய், கிளி. நண்பர்கள் விளையாட்டுக் கழகத்துக்கு- 20000 ரூபாய், கிளி. வேரவில் கலைமகள் விளையாட்டுக் கழகத்துக்கு-20000 ரூபாய், கிளி. பூநகரி சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு- 20000 ரூபாய், கிளி.அம்பாள் விளையாட்டுக் கழகத்துக்கு 25000 ரூபாய், கிளி. ஸ்கந்தா விளையாட்டுக்க ழகத்துக்கு-30000 ரூபாய், யாழ். கட்டைக்காடு சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு-20000 ரூபாய்.
யாழ்.வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியான் விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய், யாழ். வெற்றிலைக்கேணி வைரம் போவிளையாட்டுக் கழகத்துக்கு- 20000 ரூபாய், யாழ். ஆழியவளை சக்திவேல் விளையாட்டுக் கழகத்துக்கு-20000 ரூபாய், யாழ். உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்துக்கு-20000 ரூபாய், யாழ்.உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய். யாழ். வத்திராயன் மத்தி விளையாட்டுக் கழகத்துக்கு-20000 ரூபாய், யாழ். மருதங்கேணி கணேசானந்தன் விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய், யாழ். தாளையடி சென்.அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 20000ரூபாய்.
யாழ். செம்பியன்பற்று சென்பிலிப்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு-20000 ரூபாய், யாழ். மாமுனை கலைமகள் விளையாட்டுக் கழகத்துக்கு- 20000 ரூபாய், யாழ். அம்பன் உதய சூரியன் விளையாட்டுக் கழகத்துக்கு-20000ரூபாய், யாழ். சாட்டி ஏசியன் விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய், யாழ். பன்னாலை கணேசா விளையாட்டுக் கழகத்துக்கு 20000 ரூபாய்.
கிளி. உருத்திரபுரீச்சரம் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு-50000 ரூபாய், கிளி. ஆனந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு-50000 ரூபாய், கிளி. மயில்வாகனபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு 50000 ரூபாய், கிளி. கண்ணகி நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு-100000 ரூபாய், கிளி.ஆனந்தநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு 50000 ரூபாய், கிளி. நாவல்நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு-50000 ரூபாய், கிளி. திருவையாறு கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு- 50000 ரூபாய். கிளி. யூனியன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு-50000 ரூபாய். கிளி. கெங்காதரன் குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு-50000 ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.