இன்று முதல் ஒரு வாரத்துக்கு டெங்கு ஓழிப்பு வாரம்

இலங்கையில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வார காலத்திற்கு சிறப்பு வேலைத் திட்டமொன்றை செயல்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் 3 மாத காலப்பகுதியில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 24 ஆயிரத்து 600 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு என சந்தேகிக்கப்படும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இன்று புதன்கிழமையிலிருந்து ஏப்ரல் 5ம் திகதி வரை நாடு முழுவதும் டெங்கு ஓழிப்பு வாரம் சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தில் காவல்துறை , முப்படை , பாடசாலை மாணவர்கள் , சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts