காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது.
கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை அறிவதற்காய் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்தின் சார்பில் இம் மக்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தமது நிலைப்பாடு மற்றும் கோரிக்கைகளை காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகள் வடக்கு முதல்வரிடம் தெரிவித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.