பொலிஸாரின் புதுவருட தின விளையாட்டு நிகழ்வுகள்

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸாரால் புதுவருட தினத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்தார்.

புதுவருட தினத்தை முன்னிட்டு வருடாந்தம் பொலிஸாரால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில், யாழ் மாவட்டத்திற்குட்பட்ட 9 பிரதான பொலிஸ் நிலைய பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன், யாழ் மாவட்ட குடியியல் சமுகத்தினரும் பங்கு பற்ற முடியும்.

இந்த விளையாட்டு நிகழ்வில் கிரிக்கட் , கயிறிழுத்தல், சைக்கிள் ஓட்டம், மரதன் ஒட்டம், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுக்களும் இடம்பெறவுள்ளன.

இவைகளில் பங்கு பெற விரும்புபவர்கள் கிராம சேவையாளர்களினுடாக பொலிஸாருடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும் என யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்தார்.

Related Posts