இன்றைய தினம் முதல் நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி நிலையான வைப்பு வசதிக்கான வட்டி கட்டணம் (SDFR) 7% இல் இருந்து 7.25% ஆகவும், நிலையான கடன் வசதி வட்டி கட்டணம் (SLFR) 8.50% இல் இருந்து 8.75% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நியதி இருப்புக் கொள்கை (SRR) 7.5% என்ற அடிப்படையில் மாற்றமின்றி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.