தெல்லிப்பழை, பன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றில் மறைந்திருந்து மது அருந்திய நால்வரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் மது அருந்துவதாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் வாகன சாரதிகள் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த நால்வரும் ஆலயத்தோடு தொடர்பு அற்றவர்களாக காணப்பட்ட நிலையில் ஆலயத்திற்குள் யாருக்கும் தெரியாமல் சென்று தாம் கொண்டுவந்த மது போத்தல்களை அங்கு வைத்து மது அருந் தியுள்ளனர். இந்த சட்டவிரோத நடவடிக்கை கடந்த பல நாட்களாக இடம் பெற்று வந்த நிலையில், இது தொடர்பில் அவதானித்து வந்த சிலர் குறித்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நால்வரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து குறித்த நால்வரும் தப்பிக்க முயற்சித்த போதிலும் பொலிஸார் அவர்களை கையும் மெய்யுமாக துரத்திப் பிடித்துள்ளனர் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும், அவர்கள் தம்வசம் வைத்திருந்த மதுப்போத்தல்களுடன் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற் கொண்டுளளனர்.