விமல் வீரவன்சவின் உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

தனக்கு பிணை வழங்க கோரி நேற்று (புதன்கிழமை) கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவில் இருந்த போது, 40 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதனால் அரசாங்கத்திற்கு ரூபா 91 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts