போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கை யுவதி ஒருவர் இந்தியாவின் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவர் வசம் இருந்து 64 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து பெங்களூக்கு சென்ற குறித்த 39 வயதான யுவதி, சென்னை நோக்கி செல்லவிருந்த நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கயிஸ் எனப்படும் போதைப் பொருள் ஒரு கிலோ 640 கிராம் இவர் வசம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.