அரச நில அளவைத் திணைக்களத்தை மூடிவிட்டு, அரசின் சகல நில அளவைப் பணிகளையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கையொப்பமிடுவதற்கு காணி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யு. எம். பி.பீ. உதுகொட அறிவித்துள்ளார்.
இவ்வாறு நில அளவைப் பணிகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் விசேட பொருளியல் துறை குழுவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் உதுகொட தெரிவித்துள்ளார்.