மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான காரணங்கள் எதுவுமே கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது, காலம் தாழ்த்த வேண்டியது அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுாராட்சி மன்ற தேர்தலை நடத்த தான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சே இதனை இழுத்தடித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
எவ்வாறெனினும், தேர்தல் நடத்துவதற்கு காலம் தாழ்த்தப்பட்டு வருவது குறித்து அண்மைய நாட்களாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.