வீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
வீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக கனடா செல்லும் இலங்கையர்களுக்கு வீசா அனுமதி தேவையில்லை என சில சமூக வலையமைப்புக்கள் மூலம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து கனடா செல்ல விரும்புபவர்கள் http://www.cic.gc.ca/english/visit/index.asp என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.