இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான வரலாற்று டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியானது பங்களாதேஷ் அணிக்கு மிகவும் முக்கியத்துவமான போட்டியாக அமைந்துள்ளது.
கிரிக்கெட் உலகில் இணைந்து 16 வருடங்கள் 4 மாதங்கள் மற்றும் 8 நாட்களை நிறைவுசெய்யும் பங்களாதேஷ் அணி தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று (15) விளையாடவுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது. இலங்கை அணி சற்றுமுன்வரை 6 ஒட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றுள்ளது.