பொலிஸாருடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்

கணவன், மனைவி மீது கோடாரியால் வெட்டியதால் மனைவி யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி மீது கணவன் கோடாரியால் வெட்டியுள்ளார்.

மனைவியின் தகாத உறவுகளை அறிந்த கணவர் இவ்வாறு கொடுரமான முறையில் மனைவியை வெட்டியுள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த பெண்னுடன் தொடர்பு வைத்திருந்ததுடன், கதிர்காமம் வரை சென்ற சம்பவம் பொலிஸ் நிலையத்திற்கு தெரியவந்ததை அடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

மனைவியின் இவ்வாறான தொடர்புகளை அறிந்த கணவர் மனைவியை அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து வெட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts