மனைவியை தாக்க முற்பட்டவரை அடித்தே கொன்ற அயலவர்!

நேற்று கிரியெல்ல – பஹலகம பகுதியில் தனது மனைவியை அசிட் மற்றும் கத்தியைக் கொண்டு தாக்க முற்பட்டவர் உயிரிழந்துள்ளார்.

மனைவியைத் தாக்க முற்பட்ட அவரை அயல் வீட்டார் இணைந்து தாக்கியதிலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தில் தம்புஎவன – கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதான மகேஷ் திலகரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் கிரிஎல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts