பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் – நடிகைகள் கேரவனுக்குள் அமர்ந்து கடலை போடுவது வழக்கம். கடலை என்றால் ஏதாவது ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் சீட்டு விளையாடுவார்கள்.
சிலர் சினிமா உலகத்துக் கதைகளை பேசுவார்கள். இன்னும் சிலர் வீடியோ கேம் விளையாடுவார்கள்.
கிராமப்புறங்களுக்குப் போனால் கிரிக்கெட் கூட விளையாடுவார்கள். இப்படித்தான் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளை ஓய்வு நேரங்களில் ஜாலியாக கழிப்பதுண்டு.
ஆனால், ஹீரோக்களைப்பொறுத்தவரை ஹீரோயினிகளுடன்தான் ஜாஸ்தியாக பேசிக்கொண்டிருப்பார்கள், விளையாடுவார்கள்.
இதில் விஜயசேதுபதி வித்தியாசமானவராக இருக்கிறார். ஹீரோயினிகளே பேச அழைத்தாலும் அவர் செவிசாய்ப்பதில்லை.
படப்பிடிப்பு தளத்தில் உள்ள டெக்னீசியன்களுடன் கடலை போடுகிறார். அதோடு, ஜாலியாக ஓடிப்பிடிச்சும் விளையாடுகிறார்.
இதனால் விஜய சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் உள்ள டெக்னீசியன்கள் ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள். அவரிடம், தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா துளியும் இல்லை.
கீழ்மட்டும் முதல் மேல்மட்டம் வரை அனைவரையும் அவர் சமமாகவே பார்க்கிறார் என்கிறார்கள்.