பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிலும் மழைபெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த காலநிலை ஏப்ரல் மாதம் வரையில் தொடரவுள்ளது.
எனவே பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை மற்றும் இடியுடன்கூடிய மழை பெய்யவுள்ளது. மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலேயே அதிகளான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழைபெய்யவுள்ளது.
இடியுடன்கூடிய மழைபெய்யும்போது பலத்த காற்றும் வீசக்ககூடிய வாய்ப்புள்ளது. எனவே மழைபெய்பெயும்போது மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். மின்பாவனை மற்றும் தொலைபேசி பாவனையில் முடியுமான வரையில் தவிர்ந்துக்கொள்ள வேண்டும். அத்துடன் திறந்தவெளியில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வானிலை வாய்வு நிலையம் பொதுமக்களை வேண்டியுள்ளது.