ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரையும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டதுடன் அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார்.