கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவர் சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை குறித்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு தெரிவித்த மக்கள் கெடந்த முதலாம் திகதி முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்று பதினோராவது நாளாக தொடர்கின்றது.
பாடசாலை, கோவில்கள், பொதுநோக்குமண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரை எந்த தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இன்று இருவர் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.