திரையரங்கில் குழு மோதல்; காவலாளி, பொலிஸ் படுகாயம்

யாழ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் நேற்றையதினம் இடம் பெற்ற குழு மோதலில் பொலிஸார் மற்றும் காவலாளி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.நகரில் உள்ள திரையரங்குக்கு நேற்றைய தினம் 3 பேர் அடங்கிய குழுவினர் திரைப்படம்
பார்ப்பதற்கு வந்துள்ளனர். அப்போது திரைப்படம் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் பெறுவதற்கு வந்தவேளை, திரைப்படம் ஆரம்பித்து விட்டதாகவும் நுழைவுச்சீட்டுகள் பெற முடியாது எனவும் அங்குள்ள காவலாளி தெரிவித்துள்ளார்

அப்போது காவலாளிக்கும் அங்கு வந்த இளைஞர் குழுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் காவலாளியும் ஒரு இளைஞனும் படுகாயமடைந்துள்ளார். குறித்த இளைஞருடன் வந்த ஏனைய இரு இளைஞர்கள் தப்பி ஒடியுள்ளனர் படுகாயமடைந்தவரை அங்குள்ளவர்கள்பிடித்து வைத்து பின்னர் வைத்தியசாலையில் சேர்ந்துள்ளனர் .

அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே காயமடைந்த இளைஞர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் அவர் விடுப்பில் யாழில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts