கால தாமதமின்றி தீர்வு வேண்டும்; முல்லையில் ஆரம்பமானது மற்றுமொரு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வெண்டும் எனவும், கால தாமதமின்றி தீர்வு வேண்டும் இல்லையேல் சர்வதேச குற்றவியல் நிதீமன்றிற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை கொண்டு செல்லப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts