வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு வட மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பணிப்புரை விடுத்துள்ளார்
வடமாகாண நீர் தேவைகள், குடிநீர் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்விலேயே இந்த அறிவிப்பை அவை தலைவர் விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை தாம் தாம் சந்தித்து கலந்துரையாடியதாகவும்,
இதன்போது வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைகளங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிப்பதாக உறுதி மொழி வழங்கியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இந்த அமர்வு நிறைவடைந்தவுடன் குறித்த விடயம் தொடர்பில் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வட மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.