கிளிநொச்சி – ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி தான் பிரசுவித்த குழந்தையை தனது வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடை யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்த போக்கின் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் வைத்தியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் கொழும்பில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வருவதாகவும், குறை மாதத்தில் அக் குழந்தை இறந்து பிறந்த நிலையில், இவ்வாறு குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருநது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகளை துரிதப்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.