புதிய எச்சரிக்கை பெயர் பலகை

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும் வீதியின் மறுமுனையில் பிரதான வீதியில் மறித்து அமைக்கப்பட்டுள்ள காவலரண் முன்பாகவும் புதிய எச்சரிக்கை பெயர் பலகை ஒன்று இடப்பட்டுள்ளது.

அதாவது இது “இராணுவ பாசறை அனுமதி இன்றி உட்பிரவேசித்தல் முற்றாக தடை” என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

Related Posts