2006 ம் ஆண்டில் பாடசாலை மாணவர்கள் சிலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.
2006ம் ஆண்டு கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் 11 மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் சமிந்த வலாகுலுகே கூறினார்.