Ad Widget

குழந்தைகள் மீதான வன்கொடுமை : வத்திகானின் செயல்பாடு வெட்கக்கேடானது

வத்திகானில் குழந்தைகள் மீதான வன்கொடுமையை கண்காணிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

ஆணையத்தின் உறுப்பினரும், முன்பு, மதகுரு ஒருவரின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருமான மேரி காலின்ஸ் என்பவர், வத்திகானின் அதிகாரத்துவம் ஆணையத்தின் பணிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

வத்திகானின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று அவர் வர்ணித்துள்ளார்.

வன்கொடுமைகளை சமாளிக்க கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, அதற்கு எதிர்வினையாக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆணையம் ஒன்றை உருவாக்கினார் போப் பிரான்சிஸ்.

குழந்தைகளை வன்கொடுமை செய்தததாக கண்டறியப்பட்ட பல பாதிரியர்களுக்கு குறைந்த அளவிலான தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts