சிறீலங்காவின் 45 ஆவது பிரதம நீதியரசராக பிரசாத் டெப் பதவிப் பிரமாணம்!

சிறீலங்காவின் 45ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாத் டெப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசரான கே.ஸ்ரீபவன் ஓய்வுபெற்றதையடுத்து, அரசியலமைப்பு சபையால் ஏகமனதான பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டார்.

புதிய பிரதம நீதியரசருக்கு ஜனாததிபதி மைத்திரிபால சிறிசேன தனது ருவிற்றர் தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை சிறீலங்காவின் 40ஆவது சொலிசிட்டர் ஜெனரலாக பிரியசாத் டெப் பதவி வகித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசராக இருந்த இவர், இதற்கு முன்னர் பல தடவைகள் பதில் நீதியரசராக பதவியேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts