முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் சென்ற மக்களுடன் ராணுவம் முரண்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
84 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இன்றைய தினம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பெரும்பாலான மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காணிகளுக்குள் சென்ற மக்களை, இடைநடுவில் மறித்த ராணுவம் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதனால் இரு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.