சைட்டம் நிறுவனம் மற்றும் நெவில் பிரணாந்து வைத்தியசாலை என்பவற்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த சமீர சேனாரத்னவை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளதாக சைட்டம் அறிவித்துள்ளது.
சமீர சேனாரத்னவின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும், அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு வசதியாகவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சைட்டம் முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது.