சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு! பலி எண்ணிக்கை அதிகரிப்பு

களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் காயமடைந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (27) இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.

Related Posts