கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாணவர்களின் விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து பாடசாலை அதிபர்கள் அவற்றை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்புவது அவசியமாகும். பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலகங்களிலும் இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.