லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வடக்கு மாகாண விவசாய அமைச்சரை உடனடியாகப் பதவி விலகுமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் 85 ஆவது அமர்விலேயே சுகிர்தனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கத்தில் இலஞ்ச, ஊழல் இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டும் அதற்குரியவர்களுக்கெதிராக எந்தவொரு வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சராலோ, அல்லது ஆணையாளராலோ இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் குற்றம் சாட்டியுள்ளார்.