தனியார் வீடொன்றில் சித்திரவதை முகாம் ஒன்றை நடாத்தி வந்ததாக குற்றம்சாட்டப்படும் பேராதெனிய பல்கலைக்கழக விவசாய பீட 15 மாணவர்களுக்கு இன்று முதல் (22 ஆம் திகதி) விரிவுரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழ மாணவர் ஒழுக்காற்றுக் குழுப் பொறுப்பாளர் கலாநிதி ஹிடிநாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
பிரதான விசாரணை முடியும் வரையில் இவர்களது விரிவுரைத் தடை நீடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணை முடிந்த பிறகு, பிரதான விசாரணை நடாத்தப்படும் எனவும் இதற்கு சுமார் 3 மாத காலம் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.
பகிடிவதைக்குட்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி