வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார்,
வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறினால் அவற்றை உரிய முறையில் கல்வி அமைச்சர் செவிமடுப்பதாக எனக்கு தெரிவில்லை. நாம் ஏதேனும் கேட்டாலும் , இவர்களுக்கு என்ன பதில் சொல்வது போன்றதொரு பாணியில் எங்களை பார்த்து விட்டு அவற்றுக்கு பதில் சொல்வதில்லை என கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டினார். இவ்வாறு குற்றம் சாட்டும் வேளையில் கல்வி அமைச்சர் சபையில் இல்லை என்பது குறிபிடத்தக்கது.