ஒரு மருத்துவராக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யாது பகிரங்கமாக மருத்துவர் போன்று செயற்படும் சைட்டம் மருத்துவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
தெற்காசியாவின் தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (SAITM) தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்படும் அதன் மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் சமீர ரேணுக சேனாரத்னவுக்கு எதிராக அந்த சங்கம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு இன்று (22) ஒன்றை பதிவு செய்யவுள்ளது..
அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் பொது செயலாளர் ஜயந்த பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.