சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகஸ்தர் அரசாங்க அதிபரிடம் உண்மைகளை சொன்னதன் பிரதிபலனாகவே அவருக்கு பிரதேச செயலகத்தில் அவ்வாறான நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்க முன்னர் சங்காணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் வளங்கப்படாத தண்ணீர் போத்தல்கள் வளங்கப்பட்டதாக காண்பிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் கணக்காய்வு பிரிவினர் நடத்திய ஆராய்வுகளின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களிடம் நடத்திய விசாரணைகளின் போது அது தொடர்பான உண்மைகளை அங்கு பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த பிரதேச செயலகத்தில் இருந்த அபிவிருத்தி இணைப்பாளர் அரசாங்க அதிபரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிய சொன்ற இரு உத்தியோகஸ்தர்களையும் பழிவாங்கும் வகையிலான பல செயற்பாடுகள் அங்கு நடைபெற்றுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட ஆண் உத்தியோகஸ்தர் ஒருவர் அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று பிரதேச செயலர் உட்பட உயர் அதிகாரிகள் அங்கு இல்லாத நிலையில் அங்கு பொறுப்பாக இருந்த உதவித்திட்டமிடல் பணிப்பாளர், தண்ணீர் போத்தல் பிரச்சினை தொடர்பான உண்மைகளை சொன்ன பெண் உத்தியோகஸ்தரை அழைத்து பிற உத்தியேகஸ்தர்கள் முன்னிலையில் சரமாரியாக பேசியுள்ளார்.
இதனால் குறித்த பெண் உத்தியோகஸ்தர் மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் உத்தியோகஸ்தர் தனக்கு நடந்தவற்றை வைத்தியர்களிடம் கூறியுள்ளார்.
அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்தியாளர் பிரதீபன்