அரிசி தொடர்பான மோசடிகளை 1977 எனும் எண்ணுக்கு அறிவிக்கவும்

அரிசி பதுக்கி வைத்தல், அரசின் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்தல் மற்றும் இரசாயன கலவை அடங்கிய அரிசி விற்பனை செய்தல் போன்ற மேசடிகள் தொடர்பில் 1977 எனும் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

குறித்த இலக்கம் காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இது தொடர்பாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts