கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க கோரி வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை பாடசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் மக்களின் காணிகளை மக்களிடம் கொடு, அரசே எங்களின் நிலத்தை எங்களுக்கு விட்டு விடு, அரசே நில ஆக்கிரமிப்பின் மூலம் மாணவாகளின் கல்வியை பாழாக்காதே, காணிக்காக போராடும் மக்ளுக்கு தீர்வை வழங்கு, எதிர்க்கட்சித்தலைவர் 2016 ஏமாற்றப்பட்ட தலைவரா? என்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டங்கள் அனைத்து பாடசாலைகளிலும் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.