பல்கலைக்கழக அனுமதிக்காக 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

2016/2017 பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
2016/2017 பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இன்றுடன் நிறைவு பெறுகின்றது.

2016/2017 பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் ஊடாக மாணவர்கள் தற்போது தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துவருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த கல்வி வருடத்திற்கான அனுமதியை பெறத்தவறிய மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, கடந்த கல்வி ஆண்டுக்காக இவர் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இந்த மாணவி அழைக்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Related Posts