நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெஞ்சுவலி; காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர், தற்போது இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை முதலமைச்சருக்கு, கடந்த 1997ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றிருக்கின்ற நிலையில், தற்போது அவருக்கு சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.