முத்திரைச்சந்தி கிட்டுப்பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் உன்னிக்கிருஷ்ணன்

சங்கிலியன் தோப்பு கிட்டு பூங்காவில் நேற்று (18.08.2012) மாலை 6.30 மணிக்கு “தெய்வீக சுக அனுபவம்” என்ற தொனிப்பொருளில் அமைந்த இசை நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் முன் இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரபல கர்நாடக இசைப்பாடகர்களான ஸ்ரீ உன்னி கிருஸ்ணன், ரி.எம். கிருஸ்ணா ஆகியோருக்கும் ஏனைய அணிசெய் கலைஞர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts