வாள் தூக்கியவருக்கு சிறை

வாள் கொண்டு ஒருவரை வெட்ட முற்பட்ட ஒருவருக்கு, மூவாயிரம் ரூபாய் அபராதமும் 2 மாத கடுழிய சிறைத்தண்டனையும் விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், தீர்ப்பளித்தார்.

கடந்த வருடம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பத்தகராறு காரணமாக, ஒருவரை குறித்த நபர் வாளால் வெட்ட முற்பட்ட போது, பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வாள் எடுத்துச்சென்ற குற்றத்துக்காக 1,500 ரூபாயும் வெட்ட முற்பட்ட குற்றத்துக்காக 1,500 ரூபாயும் அபராதமாக விதித்த நீதவான், 2 மாத கடுழிய சிறைத்தண்டனையும் விதித்தார்.

Related Posts