கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும், அதன் வைத்தியர்கள் சிலருக்கும் எதிரான 100 மில்லியன் ரூபா அபராதம் கேட்டு களனிப் பிரதேச இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தனது இரண்டாவது பிள்ளையின் பிரசவத்தின் பின்னர் தனது வயிற்றில் பஞ்சுப் பொதியொன்றை தவறுதலாக வைத்து தையல் போட்டுள்ளதாக அப்பெண் தான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது. வயிற்றில் அடிக்கடி ஏற்படும் அதிக நோவின் காரணமாக சத்திரசிகிச்சை செய்த மருத்துவரை நாடி மருந்து பெற்றுவந்ததாகவும், நோவுக்கான மாத்திரைகளையே வைத்திய தனக்கு வழங்கி வந்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் வேறு ஒரு மருத்துவமனையை நாடிய போதே நோய் எதுவொன்பது தெரியவந்ததாகவும் மனுதாரரான அப்பெண் தனது நஷ்டஈட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.