பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் இன்று கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார்.

வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமரின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த முதல் இலங்கை பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts