முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் நடமாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள அம்பகாமத்தை அண்டிய பகுதிகளில் நடமாடும் புலிகளினால் இதுவரை 14 மாடுகளை பிடித்துச் சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுடிசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பகாம் மற்றும் மம்மில் பிரதேசங்களில் புலிகளினால் இதுவரை 14 ஆடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளை அண்டிய கிராமங்களில் வாழும் மக்களின் பிரதான தொழிலாளாக இரு தொழில்களே கானப்படுகின்றன. அதில் ஒன்று விவசாயம் மற்றையது கால்நடை வளர்ப்பு ஆகும்.

இவ்வாறு மேற்கொள்ளும் இரு தொழில் முயற்சிகளும் இன்று பெரும் கேள்விக்குரியாகவே கானப்படுகின்றது. விவசாயம் மழையின்றி ஒருபகுதி அழிவடைகின்றது. எஞ்சியவற்றை காட்டு யானைகள் அழிக்கின்றன. இது ஒரு புறமிருக்க தற்போது கால் நடை வளர்ப்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எமது கிராமங்களை அண்டிய காட்டுப் பகுதியில் அண்மைக்காலமாக பெரிய சிறுத்தைப் புலிகள் நடமாடுகின்றன.

இவ்வாறு நடமாடும் சிறுத்தைகளினால் கடந்த ஒரு மாதத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் மட்டும் 14 மாடுகளைப் பிடித்துச் சென்றுள்ளதாக பதியப்பட்டுள்ளது. இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட மாடுகள் கன்றுகள் அல்ல ஒவ்வொன்றும் வாழ்வாதார பசு மாடுகள். மிகப்பெரிய மாடுகளையும் பிடித்துச் செல்வதனால் அவை சிறிய ரக புலிகளாக இருக்க முடியாது எனக் கருதுகின்றோம். இதன் காரணமாக மேய்ச்சல் தறைகளும் இன்றி கால் நடைகளை திறந்துவிடவும் அச்சமாகவுள்ளது.

இவ்வாறு புலியினால் மாடுகள் பிடித்துச் செல்லப்படுவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு எமது வாழ்வாதார கால்நடைகளின் உயிர்களை காக்க உதவுமாறு பிரதேச செயலகத்திலும் முறையிட்டுள்ளோம். இருப்பினும் இதுவரையில் ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

குறித்த பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வாழ்வாதார மாடுகள் இதுவரை 15ஐ பிடித்துச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்களினால் எனது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. இதனால் இது தொடர்பில் நான் உடனடியாகவே வன விலங்குகள் ஜீவராசிகள் திணைக்களத்திற்கும், வனவளத் திணைக்களத்தினருக்கும் எழுத்தில் முறையிட்டுள்ளேன்.

குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வன விலங்குகள் ஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்கத் தாமதம் அடைவதே இப் பகுதி மக்களின் அவலம் தொடரக் காரணமாக அமைகின்றது. எனவே மீண்டும் ஒரு முறை குறித்த திணைக்களத்தினரிடம் தொடர்பு கொண்டு குறித்த சிறுத்தையினை பிடித்து சரணாலயத்திற்கு அனுப்புவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்றது. இருப்பினும் அங்கு நடமாடுவது ஒரு சிறுத்தையா அல்லது பல சிறுத்தைகளா எனக் கண்டறியப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயமுடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் அப்பகுதியில் காணப்படும் கால் தடங்களின் அடிப்படையில் ஒன்றிற்கும் மேற்பட்ட பல சிறுத்தைகள் நடமாடுவதாகவே அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இவ் விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts