பலாலி விமானநிலைய ஓடுபாதையை விரிவாக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் தான் கையெழுத்திடப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 84ஆவது மாகாண சபை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த அமர்வின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பலாலி விமானநிலையத்தை விரிவாக்குவதற்காக 1600 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக அபகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலம் அவர் தெரிவிக்கையில், பலாலி விமானநிலைய விரிவாக்கம் தொடர்பான திட்டத்திற்கு பெரும்பான்மை மாகாணசபை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி தான் ஒருபோதும் கையெழுத்திடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.