தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புத் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று (09) அறிவித்தார்.
நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக்காலை 10:30 க்கு கூடியது. அதன் பின்னர் விடுத்த சபாநாயகர் அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எனது கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அத்துடன், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவரும், என் கவனத்துக்கு கொண்டுவந்தார் என சபாநாயகர் தெரிவித்தார். இந்நிலையில், சுமந்திரன் எம்.பியின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.