தங்களுடனான யுத்தத்தின் போது கால்களை இழந்து சிறப்புத் தேவையுடையவர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் கால்களை வழங்கியுள்ளது.
இலங்கை ராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும், மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை ராணுவம் வழங்கியுள்ளது.
கிளிநொச்சியில் இன்று (07) ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பேருக்கு கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அமெரிக்க நிதியுதவியில், கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோருக்கான நிலையத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உதவித் திட்டத்தை கிளிநொச்சி பாதுகாப்பு படையினா் ஒழுங்கு செய்திருந்தனா்.
காலை பத்து மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன உள்ளிட்ட படை பொறுப்பதிகாரிகள் வழங்கி வைத்தனா்.