உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தம்மை ஒரு எளிமையான மனிதனாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தி வரும் ஜனாதிபதி மைத்திரி, தமது சொந்த ஊரான பொலனறுவைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்து தாம் வாழ்ந்த இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார்.
தமது கிராமத்து மக்களுடன் இன்முகத்துடன் சிரித்துப் பேசி நலம் விசாரித்த ஜனாதிபதி மைத்திரி, தாம் சிறுவயதில் வாழ்ந்த வீட்டிற்கும் சென்றுள்ளார்.
மற்றும் அங்குள்ள சில்லறை கடைக்குச் சென்று பொருட்களின் விலைகளை கேட்டறிந்ததோடு, லக்ஷ உயன புகையிரத நிலையத்திற்கும் சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.