புதுக்குடியிருப்பில் வலுக்கிறது ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை

ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts