தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை பெருமளவு நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேங்காய் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உணவுப் பொதியொன்றினை, 50 ரூபாய்க்கு வழங்க முடியாத நிலைமைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.